திருப்பூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியிலிருந்து அய்யம்பாளையம், சபரி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு செல்ல இடையூறாக சாலையின் நடுவே காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டிருந்தன.



இதனால் செட்டிபாளையத்திலிருந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுவதோடு ஒரு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய சூழல் நிலவுவதாகவும் இதனால் நேர விரயம் ஏற்படுவதோடு வேலைக்கு செல்பவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் ஏற்கனவே அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் அதனை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில், சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை அகற்றாத நிலையில் பொதுமக்கள் இன்று திடீரென திருப்பூர்-தாராபுரம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு டிவைடர்களை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பொதுமக்கள் தாங்களாகவே சாலைத் தடுப்புகளை அகற்ற முயற்சித்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் செட்டிபாளையம் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு செல்வதற்கான சாலையையும் நெடுஞ்சாலைத்துறை கற்கள் கொண்டு அடைக்கப்பட்டு இருப்பதால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...