திருப்பூர்: திருப்பூர் அருகே நிலத்தின் உரிமையாளர்களை வெளியூர் நபர்கள் என காரணம் காட்டி வீடு கட்ட விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அருகே நிலத்தின் உரிமையாளர்களை வெளியூர் நபர்கள் என காரணம் காட்டி வீடு கட்ட விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தெற்காசியப் பாளையம் பகுதியில் வீட்டு மனையிடங்களாக லே- அவுட் போடப்பட்டு, கலைஞர் கருணாநிதி நகர் என பெயரிடப்பட்டு, விற்பனை செய்த பாலசுப்பிரமணியம், தனியாரிடமிருந்து 60க்கும் மேற்பட்டவர்கள் மனையிடங்களாக கிரயம் பெற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வீட்டு மனைகளை வாங்கிய 50க்கும் மேற்பட்ட மனையின் உரிமையாளர்கள், கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்தும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வெளியூர் நபர்கள் என்று கூறி வீடுகளை கட்டவிடாமல் தடுத்து வருவதாகவும், அதையும் மீறி வீடு கட்டும் நபர்களின் வீட்டை இடித்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் வீடு கட்டுவதற்கு வாங்கிய தங்களின் இடமானது சீமைவேலி முளைத்து காடு போல் காட்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து கிரயம் பெற்ற இடத்தில் வீடுகளை கட்டி குடியேற பாதுகாப்பு வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.