கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுப்பு..! போலீசார் விசாரணை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் ரெட் ஜோன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள கழிவறைக்கு இன்று மதியம் துப்புரவு பணியாளர் ஒருவர் துப்புரவு செய்வதற்காக சென்றார்.

அப்போது, அங்கு கழிவறையில் ஒரு சிசு இறந்த நிலையில் கிடந்தது. உடனடியாக அவர் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கூறினார். உடனடியாக கழிவறையிலிருந்து அந்த சிசு மீட்கப்பட்டது. பிறகு பரிசோதனை செய்ததில் அது பெண் சிசு என்பதும், அது இறந்து உள்ளது என்பதும் தெரிய வந்தது. சுமார் 2 கிலோ எடையுடன் காணப்பட்டது.

இந்த பெண் சிசு எப்படி விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறை பகுதிக்கு வந்தது என்பது குறித்தும் ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பி இருந்தனர். பின்னர் இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? இல்லை குழந்தை இறந்து பிறந்ததால் கழிவறையில் போட்டு சென்றார்களா? இல்லை குழந்தை கொல்லப்பட்ட உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...