பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த தமிழர்களுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி சார் ஆட்சியரிடம் மனு..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த தமிழர்களுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி சார் ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிர் நீத்த தமிழர்களுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி சார் ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பொள்ளாச்சி, திருப்பூர், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், தமிழர்கள் பலர் பலியாகினர். 

மொழிப் போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தியாகிகள் பலருக்கு அவர்களது சொந்த ஊரில் நினைவுத் தூண்கள் மற்றும் மணிமண்டபங்கள் வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சியில் 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய ராணுவத்தால், சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதில், உயிரிழந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் மணிமண்டபமோ, நினைவுத்தூனோ இதுவரை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்மொழிக்கும் பொள்ளாச்சி மண்ணிற்கும் வரலாற்று சிறப்பு செய்த, தியாகிகளை நினைவு கூறும் வகையில், பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், நினைவுத்தூண்டன் கூடிய மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்று, மொழிப்போர் நினைவு கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...