மு க ஸ்டாலின் சிந்தனைச் சிற்பியாக மாறி தினந்தோறும் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்- துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 27 மற்றும் 29 வது வார்டுகளில் அன்னை கஸ்தூரிபாய் வீதி, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொது மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 27 மற்றும் 29 வது வார்டுகளில் அன்னை கஸ்தூரிபாய் வீதி, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொது மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர். 



மேலும், அப்பகுதிகளில் உள்ள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, அதிமுக 2021 ஆம் ஆண்டு வெற்றி கூட்டணியாக தேர்தலை சந்தித்து 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். யாருடைய வருகையை பற்றியோ அரசியல் தலையீடு பற்றியோ அதிமுக அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, என்றார். 



"எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பாக நடத்தப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக. கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் எளிய முறையில் நடந்து மக்கள் அனுமானத்தை பெற்றுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிந்தனைச் சிற்பியாக மாறி தினந்தோறும் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவருடைய பேச்சையும் செயல்பாட்டையும் மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள்", என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...