கோவை அருகே குளத்தில் பூத்த தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கோவை: கோவை அருகே குளத்தில் பூத்த தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே குளத்தில் பூத்த தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே வேலாண்டிபாளையம், கோவில்மேடு, திலகர் வீதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன்கள் ஆனந்தன் (25), ஹரி (20), இவர்களது நண்பர் மதன் (23) ஆகிய 3 பேரும் லேத் ஒர்க் ஷாப்பில் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று 3 பேரும் பேரூர் வீரகேரளம் சாலையில் உள்ள கோலரம் பகுதிக்கு குளத்திற்கு சென்றனர். குளத்தில் பூத்த தாமரைப் பூக்களைப் பார்த்தவுடன் அதை பறிப்பதற்காக ஆனந்தனும், ஹரியும் அடுத்தடுத்து குளத்தில் இறங்கினர்.

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாத இருவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடுவதை கண்டவுடன் கரையில் இருந்த மதன் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்களும் பொதுமக்களும் சேர்ந்து கயிறு மூலம் குளத்தில் மூழ்கிய சகோதரர்களை மீட்க முயற்சித்தனர். அதில் ஹரியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் ஹரி இறந்துவிட்டார். வெகு நேரம் தேடியும் ஆனந்தனை காணவில்லை.

பின்னர் இது குறித்து தகவலறிந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குளத்தில் இறங்கி அவரை தேடினர். சேறு நிறைந்த குளத்தின் அடியில் அவரது உடல் சிக்கியிருந்தது. இதையடுத்து, ஒரு மணி நேரம் தேடி ஆனந்தனின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

இதனை தொடர்ந்து, சகோதரர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...