கோவை அருகே புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது - 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவை: கோவை அருகே வாகனங்களில் கடத்திய 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.


கோவை: கோவை அருகே வாகனங்களில் கடத்திய 2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

கோவை அருகே விலாங்குறிச்சி ரோடு, காந்தி மாநகரில் நேற்று இரவு சரவணம்பட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வேன் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில் வந்த 6 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு நடேசன் கோவில் வீதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (37), கோவை உடையாம்பாளையம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (27), விழுப்புரம் மாவட்டம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (23), கணபதி லட்சுமி புரத்தைச் சேர்ந்த அனந்தநாராயணன் (51), நெல்லை மாவட்டம் வி. எம் சத்திரத்தை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (22), தூத்துக்குடி முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முருகன் (32) ஆகியோர் என்பதும் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து போலீசார் 30 மூட்டைகளில் இருந்து ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான 2 டன் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் எங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...