சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் இயங்கும் எனவும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உடன் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் நாளை மறுநாள் (நவம்பர் 30) முடிவடையவுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கினை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிவர் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், தமிழகத்தில் கொரோனா தற்போதைய நிலவரம், தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ள 2,000 மினி 'கிளினிக்'குகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 15ம் தேதிக்குள் 2000 நடமாடும் மினி கிளினிக் துவங்கப்படும் எனவும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அடங்கிய மினி கிளினிகில் இருப்பார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.