கோவை: கோவை வெள்ளலூர் குப்பைகிடங்கில் மழை காலங்களில் தூர்நாற்றம் வீசுவதாகவும், ஈ மற்றும் நோய் பரப்பும் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 850 டன் முதல் 1000 டன் வரை கொட்டப்படுகிறது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றி கோணவாய்க்கால் பாளையம், அன்பு நகர், எல்.ஜி. நகர், ஸ்ரீராம் நகர், கஞ்சிகோணாம் பாளையம், சித்தன்னாபுரம், அற்புதம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வெள்ளலூர் பேரூராட்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களும் அருகில் வசிக்கின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை, ‘பயோ மைனிங்' முறையில் அகற்ற ரூ.60.16 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டது. பயோ மைனிங் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆனால் இன்னமும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மேலும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், தற்போது 24 நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதில், 5 மையங்களில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள், பயோ மைனிங் திட்டம் போன்றவைகள் முழுமையாக செயல்பாட்டிற்கு இன்னமும் வராததால், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது குறைக்கப்பட முடியவில்லை. இதனிடையே கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பைகள் தேக்கி வைக்கப்படுவதால் மழை காலங்களில் குப்பைகள் மழை நீரில் நினைந்து, இதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ‘ஈ’ தொல்லைகளும் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ள அர்.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்:
பயோ மைனிங் திட்டத்தை முழுவதும் செயல்படுத்த அதற்கு ஏற்றார் போல் மின்சார வசதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மின்வாரியத்திடம் மாநகராட்சி சார்பாக மின்சார வசதி ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயோ மைனிங் திட்டம் செயல்பாட்டிற்கு வரும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் மற்றும் குளோரின் ஆகியவையும் தெளிக்கப்படுகிறது. மழை ஈரம் காரணமாக தூர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை மலை போல் தேக்கி வைக்காமல் பிரித்து பிரித்து தான் வைக்கப்பட்டுள்ளது.
ஈ மற்றும் கொசு தொல்லைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.