பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து; வாலிபர் படுகாயம்

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் என்.எஸ்.கே கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவரது மகன் 24 வயதான அஜித்குமார், கடந்த 26 ஆம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் சொக்கனூர் பகுதியிலிருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் என்.எஸ்.கே கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவரது மகன் 24 வயதான அஜித்குமார், கடந்த 26 ஆம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் சொக்கனூர் பகுதியிலிருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கல்லுக்குழி என்ற இடம் அருகே வரும் பொழுது, எதிரே வந்த பயணிகள் ஆட்டோ இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது, இதில், இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமார் தூக்கி வீசப்பட்டு, தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். 

பின்னர், அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அஜித்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அஜித்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் அஜித்குமாரின் தாய் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனரான சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த அருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...