கோவை முத்தண்ணன் குளக்கரையில் அரசியல் கட்சிகளின் மன்றங்களை இடிக்கும் பணி துவங்கியது..!

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக, குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2,300 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக, குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2,300 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. 



இந்நிலையில், பல்வேறு கட்சிகளுக்கு சொந்தமான 6 மன்றங்கள் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுயிருந்தன. இந்நிலையில், நேற்று கட்சி மன்றங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்றன. அதில், 2 அ.தி.மு.க. கட்சி மன்றங்கள், 2 தி.மு.க. மன்றங்கள், 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மன்றம், 1 திருவள்ளுவர் சமூக மன்றம் என 6 மன்றங்களையும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.



மாநகராட்சியின் நகரமைப்பு அதிகாரி ரவிசந்திரன் மேற்பார்வையில், ஆர் எஸ் புரம் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. 

இது தவிர குளக்கரையையொட்டி 5 கோவில்கள் உள்ளன. இவற்றையும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...