கோவை: கோவையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் நொய்யல் ஆற்றில் அதிக கன அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பிறகு மழை பெய்யவில்லை.
மேலும், இரவில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. நிவர் புயல் காரணமாக கோவையில் மழை பெய்யுமா? என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கோவையில் மழை பெய்யவில்லை.

இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இரவு 8 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் கோவை உக்கடம், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர், கணபதி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
அதேபோல, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைபுதூர், கருமத்தம்பட்டி, சோமனூர், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 12 மணிக்கு பிறகும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் கோவை குளிர்ந்தது.
மேலும் சூலூர், இருகூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அந்தப் பகுதிகள் இதமான சூழல் நிலவியது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.