பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்டம்,பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நவம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி வரை பிறந்த 7ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம்.நாகராஜன் ஏற்பாட்டில், இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் மருதுவேல் துரை, ராசு உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும், என்றும் திமுகவினர் தெரிவித்தனர்.