கோவையில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள்..! கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள டி நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளி பாலசுப்பிரமணியம் (68). இவருக்கு சரஸ்வதி (63) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவர் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், கணவரது இறப்பினால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதியும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சாவிலும் இணைபிரியாத தம்பதி உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரின் உடல்களும் அதே ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...