கோவை தனியார் கல்வி அறக்கட்டளையிடம் சிக்கியிருந்த சான்றிதழ்களை போராடி மீட்ட மாணவர்கள்..! - அகில இந்திய மாணவர் பெருமன்றம் தகவல்

கோவை: மாணவர்களின் சான்றிதழைப் பறித்து வைத்திருந்த கோவையை சேர்ந்த எஸ் எஸ் எம் கல்வி அறக்கட்டளையினரை மாணவர்களே கையும் களவுமாக பிடித்து சான்றிதழ்களைப் பெற்றனர், என அகில இந்திய மாணவர் பெருமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை: மாணவர்களின் சான்றிதழைப் பறித்து வைத்திருந்த கோவையை சேர்ந்த எஸ் எஸ் எம் கல்வி அறக்கட்டளையினரை மாணவர்களே கையும் களவுமாக பிடித்து சான்றிதழ்களைப் பெற்றனர், என அகில இந்திய மாணவர் பெருமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மாணவர் பெருமன்றம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை எஸ் எஸ் எம் (SSM) கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு மோசடிக் குழுவானது, மாணவர்களைக் குறி வைத்து, அவர்களை ஏமாற்றி பொறியியல் கல்லூரிகளில் சேர்த்தி அதன் மூலம் கல்லூரியிடம் கமிஷன் பெறுவதைத் தொழிலாகவே செய்து வருகின்றனர். 

சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 3 மாணவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுத் தரக்கோரியும், அறக்கட்டளையினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தக் கோரியும் மாணவர் பெருமன்றம்  (AISF) சார்பில் 05.11.2020 அன்று மாவட்ட ஆட்சியருக்கும், 07.11.2020 அன்று சூலூர் காவல் நிலையத்திலும் மனு கொடுத்தோம். 

மேலும், எஸ் எப் ஐ (SFI) சார்பில் கடந்த வாரம் அன்னூர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த மாணவனின் சான்றிதழ் மற்றும் ரூ.5000த்தைப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தங்களுக்கு காந்திபுரம், சிங்காநல்லூரில் அலுவலகம் இருப்பதாக சொல்லும் அறக்கட்டளைக்கு அப்படி எந்த அலுவலகமும் இல்லை. எனவே, இவர்களின் செல்போன் எண்களைப் பயன்படுத்தி சைபர் குற்றப்பிரிவினரால் தான் இவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை உருவானது.

27.11.2020 மதியம் வரை மாவட்ட ஆட்சியர், DRO, காவல்துறை, தாசில்தார் என பலரிடம் பலமுறை அலைந்தும், மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. (27.11.2020 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், "48 மணி நேரத்தில சான்றிதழ்கள் கிடைக்கலன்னா எனக்கு call பன்னுங்க" என்று சொன்னதை வரவேற்கிறோம். ஆனாலும், நாங்களும் அவர்களைத் தேட முடிவெடுத்தோம்)

கடந்த 27 ஆம் தேதி, மதியம் அறக்கட்டளையினர் குறித்து சுகுணா கல்லூரி முதல்வரிடம் விசாரிக்கச் சென்ற SFI தோழர்களிடம் அங்கே வந்திருந்த SSM கல்வி அறக்கட்டளை நிர்வாகி, பிரபு என்பவர் கையும் களவுமாக பிடிபட்டார். கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு அன்னூரைச் சேர்ந்த மாணவனின் சான்றிதழ்களும், பணமும் அப்போதே பெறப்பட்டது.

கண்ணம்பாளையம் மாணவர்களின் சான்றிதழ்களைக் கேட்டதற்கு, ஆதித்யா கல்லூரிக்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார் பிரபு. பின்னர், ஆதித்யா கல்லூரிக்குச் செல்லாமல், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினார். உள்ளே சென்றதும் காவல்துறையினரிடம் AISF, SFI தோழர்களைக் காட்டி, "நான் ஒரு கல்லூரி பேராசிரியர், மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர உதவி செய்து வருகிறேன்.  ஆனால், இவர்கள் என்னை மிரட்டும் தொனியில் அடிக்க வருவதாகவும் மற்றும் ரவுடிசம் செய்வதாகவும் தெரிவித்தார். அதனால், எங்கள் மீது புகார் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது, நாங்களும் எங்கள் மனுக்களின் நகல்களைக் கொடுத்து நடந்ததைச் சொன்னோம். அங்கிருந்த உளவுப் பிரிவு அதிகாரியும் நல்ல விதமாகவே பேசினார். மாணவர்களின் சான்றிதழ்கள் இன்றே உடனே வேண்டும் என்பதை உறுதியாக கூறினோம். அதற்கு பிரபு, சான்றிதழ்கள் சுகுணா கல்லூரியில் தான் இருக்கிறது; என்னிடம் இல்லை; அங்கே வந்தால் வாங்கித் தருகிறேன், என்றார்.

கொட்டும் மழையில், நாங்கள் சுகுணா கல்லூரிக்கு விரைந்தோம். அங்கே சென்றால் நாளை வாருங்கள், என்றனர். இன்றே வேண்டும் என்று அங்கேயே நின்றோம்.அந்த சமயத்தில் தான், சான்றிதழ்களை பிரபுவின் உதவியாளர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தார். பிரச்சினை என்றவுடன் சுகுணா கல்லூரி மீது பிரபு பழிபோட்டுவிட்டார், என்பதை அறிந்தோம். 

தங்களது குடும்பத்தில் இதுவரை கல்லூரிக்கே செல்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஒரு வழியாக சான்றிதழ்களைப் பெற்றுத் தந்தோம். தற்போது, தனியார் கல்லூரியில் சேர்ந்து கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் 2 மாணவர்கள் இருக்கிறார்கள்.

எஸ் எஸ் எம் கல்வி அறக்கட்டளையினர் மீது விசாரணை நடத்தி, குற்ற வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கமிஷனுக்காக வலுக்கட்டாயமாக மாணவர்களை, பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் தீவிர அறவழிப் போராட்டங்களை AISF, SFI முன்னெடுக்கும். 

சுமார் 20 நாட்கள் போராட்டத்தினை, AISF மாநில தலைவர் தோழர் மௌ.குணசேகர், SFI மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா ஆகியோர் முன்னின்று நடத்தினர். இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி, என அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...