அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்ததால், கோவை மோட்டர் பம்புசெட் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிரடி முடிவு..!

கோவை: கோவையில் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்ததால் மோட்டர் பம்புசெட் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (கோப்மா), சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம், என அதன் தலைவர் மணிராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்ததால் மோட்டர் பம்புசெட் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (கோப்மா), சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம், என அதன் தலைவர் மணிராஜ் தெரிவித்துள்ளார். 

தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை சார்ந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இதனிடையே, பல்வேறு காரணங்களால் தொழில் நிறுவனங்கள் பின்னடவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, அரசியல் கட்சிகள் தொழில் துறையினர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர்களது கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் நிராகரித்து வருவதாக, கூறி கோவை மாவட்ட மோட்டர் பம்புசெட் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாலும், நெருக்கடி காலத்தில் தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வில்லை, என்பதாலும் தொழில் துறை பிரச்சனைகளை முன்வைக்கும் வகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் மணிராஜ் தெரிவித்தார். 

மேலும், தொழில் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தாங்கள் வலுவாக உள்ள தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அப்போது அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...