கோவை: சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து போலீசார், சமீபத்தில் கைது செய்தனர்.

போலி தங்க பிஸ்கட் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வந்த அந்த கும்பலை பிடித்த கருமத்தம்பட்டி மட்டும் சூலூர் போலீசாரை டி.எஸ்.பி சூரியமூர்த்தி வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- .சூலூர் கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு வீடு வாடகைக்கு தர வேண்டாம். அவர்கள், இதே போல கொள்ளை கும்பல் அல்லது வேறு ஏதாவது சமூக விரோத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். அவ்வாறு வீடு கேட்டு வரும் நபர்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை சரிபார்த்து பெற்றுக்கொண்டு தான் வீடுகளை வாடகைக்கு விட வேண்டும்.
இதே போல, தங்கக்கட்டி தருவதாகவும், மேலும் பல ஏமாற்று வேலை செய்பவர்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறைக்கோ அல்லது 100 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் குடியிருப்பவர்கள் வெளிமாநிலங்களுக்கு வெளியூர்களுக்கு நீண்ட நாள் பயணம் செய்வதாக இருந்தால், வீட்டை பூட்டி செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.