கோவை: கோவை கோவில்பாளையம், அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60), நாதஸ்வர கலைஞர். இவரது மனைவி மற்றும் மகன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதனால், ராஜன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ராஜன் சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. வியாழன் அன்று இரவு வீட்டில் இருந்த அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப், பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல, பொள்ளாச்சி அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (44) தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில், தான் இவரது மனைவி இறந்துள்ளார், இதனால் ஸ்ரீதர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று, வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதர் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இரண்டு வழக்குகளிலும் 174 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.