கோவை மாவட்டத்தில் 14,281 விவசாயிகளுக்கு ரூ.187.78 கோடி கடனுதவி - ஆட்சியர் தகவல்

கோவை: இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு ராஜாமணி கலந்துகொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கோவை: இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு ராஜாமணி கலந்துகொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

அதன் பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: 

கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக 633 மி.மீ மழை பெய்ய வேண்டும். நவம்பர் மாதம் வரை 612.மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் தற்போது வரை 455.8 மி.மீ மழை அளவு மட்டுமே பொழிந்துள்ளது. 

கூட்டுறவு வங்கி மூலம் 2020-21 ஆண்டிற்கு விவசாயிகளுக்கு பயிர்கடன் கடனுதவி வழங்க ரூ.360 கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவரை, மாவட்டத்தில் 14,281 விவசாயிகளுக்கு ரூ.187.78 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறையின் மூலம் இதுவரை, நீர்சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடியல் அமைத்தல், மண்புழு உரக் கூடாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்த ரூ.143.65 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது, என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...