கோவை: கோவை புறநகர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலால் கோவை மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், ஒரு சில இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் புறநகர் பகுதிகளான சூலூர், சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர், காமாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.