புதிதாக கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்..!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.



அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல அலுவலகம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ளது. அதே பகுதியில், இயங்கி வந்த அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க அலுவலக கட்டிடம் பழுதடைந்திருந்ததால் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பணிகள் முழுதும் முடிவடைந்ததால், புதிய அலுவலகத்தை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.   



முன்னதாக, அங்குள்ள முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

இந்த. நிகழ்ச்சியில் அண்ணா போக்குவரத்து  தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஆறுகுட்டி, ஓ.கே.சின்ராஜ், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, அமைச்சரை வரவேற்க தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் முதலமைச்சர் வாழ்க, அமைச்சர் வாழ்க என்று வாழ்த்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...