கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி முழுவதும் நிறைவடைந்துள்ளது. சுமார் 2300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே, அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அங்கு காலியாக உள்ள வீடுகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகளை கடந்த சில நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதில், சுமார் 2300 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘முத்தண்ணன் குளக்கரையில் 2300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 5 கோவில்கள், 2 மன்றங்கள் உள்ளிட்டவை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,’’ என்றார்.