கோவையில் இணையவழியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த எதிர்ப்பு; 200 விவசாயிகள் புறக்கணிப்பு..!

கோவை: கோவையில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடந்தது.

கோவை: கோவையில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடந்தது.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இணையவழியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி கோவை கலெக்டர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. 

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை இணையவழியில் தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எஸ்.எஸ்.குளம், பேரூர், சூலூர், தொண்டாமுத்தூர், காரமடை, சுத்தல்பேட்டை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து கொண்டு கலந்து கொண்டனர். 

காணொளி காட்சி மூலம் இக்கூட்டம் நடத்துவதிற்கு விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், குறைந்தளவே விவசாயிகள் கலந்துகொண்டனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அச்சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: 

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காணொளி காட்சி மூலம் நடந்து வருகிறது. அதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தெரிவதில்லை. இடையில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக காணொளி காட்சி சரிவர புரிவதில்லை. அதிகாரிகள் பேசுவது விவசாயிகளுக்கு தெளிவாக கேட்பதில்லை. 

தற்போது, கொரோனா வைரஸ் குறைந்து வரும் வேலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகளும் அதிகாரிகளுக்கும் நேரிடையாக பங்கேற்கும் கூட்டமாக நடத்த வேண்டும். எனவே இதனை வலியுறுத்தி இக்கூட்டத்தை புறக்கணிக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கம் (சாதி, மதம், கட்சி சார்பற்றது) மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது: 

கெயில் நிறுவனம் விலை நிலங்களில் உள்ள தேக்கு, தென்னை, மா, முருங்கை மற்றும் வாழை, சோளம் போன்றவற்றை சேதப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை, அவர்கள் எந்தவிதமான இழப்பீடும் தராதது மட்டுமல்லாமல், விளைநிலங்களில் இரும்பு குழாய்களை இறக்கி வைத்தும், ஒன்றோடு ஒன்று இணைத்து வைத்தும் உள்ளனர். இதனால் விவசாயிகள் விளைநிலங்களில் மேற்கொண்டு பயிர் செய்ய இயலாமலும், மற்ற பயிர்களுக்கு நீர் பாய்ச்ச இயலாமலும் அடுத்த போக விளைச்சலுக்கு நிலத்தை பண்படுத்த முடியாமலும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, கெயில் நிறுவனத்தை விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறும், விளைநிலங்களில் உள்ள விவசாயத்திற்கு இடையூறாக உள்ள இரும்பு குழாய்களை அகற்றி பயிர் சாகுபடி செய்ய ஆவண செய்யுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...