கோவை: உள்ளாட்சித் துறையின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படைத் தேவையான முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
கோவை 39வது வட்டம் பீளமேடு, பொரிக்கடை சந்து பகுதியில் கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியில் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முககவசம், கையுறை, காலணி உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மைப் பணிகளை வெறும் கைகளால் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்வதால் நகம், தோல் வழியாக தொற்றுநோய் கிருமிகள் பரவி, ரத்த சோகை, தோல் நோய் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் அவல நிலைக்கு , தூய்மைப் பணியாளர்கள் ஆளாகின்றனர்.
இந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி சார்பில் முககவசம், கையுறை , காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சென்று தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வரும் இவர்களுக்கு போதிய விழிப்புணர்வும் , பாதுகாப்பும் தர வேண்டியது மாநகராட்சியின் கடமை.
ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மெத்தனப் போக்கான தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் கோவை மாநகராட்சி நிர்வாகம் , தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை. தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை.
உள்ளாட்சித் துறையின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படைத் தேவையான முககவசம், கையுறை, காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கும் வேலையைக் கூட செய்யமுடியாத துறையாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித் துறை உள்ளது.
தூய்மைப் பணியாளர்களை அனாதைகளாக, நிர்க்கதியாக கைவிட்டு, நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித் துறையும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் தன் கடமையில் இருந்து நழுவுகிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரத்தையும், மதிப்பையும் வழங்குங்கள். அவர்கள் சமூகத்துக்கு சேவை செய்ய விதிக்கப்பட்டவர்கள் அல்ல, சேவையாளர்கள்.
ஆகவே, கோவை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இதுபோன்று பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மைப் பணியில் ஈடுபடுவதை தடுத்து, இந்த பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் முககவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டு, இந்த பணியாளர்கள் அவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.