கோவை: கோவை: வால்பாறையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டம் திமுக தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் தலைமையில் வால்பாறை நகராட்சி முன்பு நடைபெற்றது

44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கியும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் விவசாய விரோத சட்டங்களை நிறைவேற்றியும் மின்சார திருத்த சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டபடி மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் செயலாளர் வினோத், மதிமுக கல்யாணி, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் மோகன் மாணிக்கம், பெரியசாமி, பரமசிவம், வழக்கறிஞர் விஸ்வநாதன் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் மறியலில் ஈடுபட்ட 42 ஆண்கள், 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.