பொள்ளாச்சியில் காட்டுபன்றி மோதி இறந்தவர் குடும்பத்திற்கு, வனத்துறை சார்பாக ரூ 3.50 லட்சம் நிவாரணம்..!

பொள்ளாச்சி: கடந்த செப்டம்பர் மாதம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட வால்பாறை ரோடு - கோட்டூர் பிரிவு பகுதியில், சொக்கலிங்கம் என்பவர் ஒரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, காட்டுபன்றி ஒன்று மொபட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.



பொள்ளாச்சி: கடந்த செப்டம்பர் மாதம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட வால்பாறை ரோடு - கோட்டூர் பிரிவு பகுதியில், சொக்கலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, காட்டுபன்றி ஒன்று மொபட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது குடும்பத்துக்கு வனத்துறையினால் வழங்கப்படும் ரூ.4 லட்சத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், காட்டுபன்றி மோதி இறந்த சொக்கலிங்கத்தின் குடும்பத்திற்கு மீதமுள்ள நிவாரண தொகையான ரூ.3.50 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

வனக்கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் முன்னிலை வகித்தார். இதற்கு, வால்பாறை எம்எல்ஏ, கஸ்தூரிவாசு தலைமை தாங்கி, நிவாரண தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கள இயக்குனரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், வனச்சரகர் புகழேந்தி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் சுந்தரம், சோமந்துறை சித்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...