நிவர் புயல் எதிரொலி: கோவை - சென்னை இடையேயான ரயில் சேவை ரத்து!

கோவை: நிவர் புயல் பாதிப்பு காரணமாக கோவை - சென்னை இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: நிவர் புயல் பாதிப்பு காரணமாக கோவை - சென்னை இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயல் காரணமாக கோவை சென்னை இடையேயான ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. 02675 என்ற சென்னை-கோவை இடையேயான சிறப்பு ரயில், 02676 எண் கொண்ட கோவை - சென்னை இடையான சிறப்பு ரயில் 06027 எண் உடைய சென்னை கோவை சிறப்பு ரயில், 02678 என்ற கோவை சென்னை சிறப்பு ரயில் 02680 என்ற எண் கொண்ட சென்னை கோவை சிறப்பு ரயில் 02679 என்ற கோவை சென்னை சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, 02624 திருவனந்தபுரம் சென்னை சிறப்பு ரயில், 02640 ஆலப்புலா சென்னை சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர 02623 சென்னை திருவனந்தபுரம் ரயில் சென்னை-கோவை இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது. 02639 சென்னை ஆலப்புலா சிறப்பு ரயில் சென்னை ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், 06231 மயிலாடுதுறை மைசூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறை திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. 06187 காரைக்கால் எர்ணாகுளம் சிறப்பு ரயில் காரைக்கால் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும். 02084 கோவை மயிலாடுதுறை ஜன சதாப்தி ரயில் இன்று திருச்சி வரை மட்டும் இயக்கப்பட உள்ளது.

அதேபோல, 02083 மயிலாடுதுறை கோவை ஜன சதாப்தி ரயில் இன்று மயிலாடுதுறையில் இருந்து இயக்கப்படாமல் திருச்சியில் இருந்து கோவைக்கு இயக்கப்பட உள்ளது. நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்படும். ரயில்களில் முன்பதிவு செய்திருந்தார் முழு கட்டணமும் திருப்பி வழங்கப்பட உள்ளது. 6 மாதங்களுக்குள் இந்த கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...