கோவை குளத்தில் மிதந்த ஆண், பெண் பிணம்; உடலை மீட்டு போலீசார் விசாரணை

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு ஆலந்தூரை சேர்ந்தவர் கேசவன் (வயது 48), இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காடு ஆலந்தூரை சேர்ந்தவர் கேசவன் (வயது 48), இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கேசவன் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால், அவர் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.



இந்த நிலையில், கேசவன் கோவை உக்கடம் பெரியகுளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை அவரது உடல் குளத்தில் மிதந்தது. அப்போது, அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் குளத்தில் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் பிணமாக மிதந்த கேசவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து பெரியகடைவீதி போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலங்குளத்தில் 55 (வயது) மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...