குடிப்பழக்கத்தால் விபரீதம்; கோவை அருகே தோட்ட தொழிலாளி அடித்துக் கொலை..!

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வலசுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56), விவசாயி. இவரது நண்பர், ராம்குமார் (24) பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.


கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வலசுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56), விவசாயி. இவரது நண்பர், ராம்குமார் (24) பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், கருப்பசாமியும் ராம்குமாரும் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனை, ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் கண்டித்து வந்துள்ளார். இருந்தும், அவர்கள் இருவரும் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

நேற்று இரவு மீண்டும் அவர்கள் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்த போது, இதைப்பார்த்த சக்திவேல் அங்கு சென்று ராம்குமாரை கண்டித்துள்ளார். இதனால், ஆதுரம் ஆத்திரம் அடைந்த கருப்பசாமிக்கும், சக்தி வேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து கருப்பசாமியை தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி வேலை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...