கிணத்துக்கடவில் சோகம்..! மகன் இறந்த துக்கத்தில் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த தந்தை உயிரிழப்பு..!

கோவை: கிணத்துக்கடவு பகுதியில் மாரடைப்பால் மகன் இறந்த சோகத்தில், 81 வயதுடைய தந்தை பூச்சி கொல்லி மருந்தை அருந்தி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் மாரடைப்பால் மகன் இறந்த சோகத்தில், 81 வயதுடைய தந்தை பூச்சி கொல்லி மருந்தை அருந்தி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு, பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமன் (81). இவருக்கு மஞ்சமலை, முனியாண்டி என்ற 2 மகன்கள் உள்ளனர், இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூத்த மகனான மஞ்சமலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட தந்தை ராமன் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் செடிகளுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார், மயக்க நிலையில் இருந்த ராமனை அவரது இரண்டாவது மகன் முனியாண்டி மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...