கோவையில் தூய்மைப் பணிகள்‌, சாலைப் பணிகள்‌ மற்றும் 24 மணி நேரமும்‌ குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தூய்மைப் பணிகள்‌, சாலைப் பணிகள்‌ குறித்தும்‌, மற்றும்‌ தெற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேரமும்‌ குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தூய்மைப் பணிகள்‌, சாலைப் பணிகள்‌ குறித்தும்‌, மற்றும்‌ தெற்கு மண்டலத்தில்‌ 24 மணிநேரமும்‌ குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 36க்குட்டபட்ட அசோக்‌ லே அவுட்‌ பகுதியில்‌ தூய்மைப் பணியாளர்கள்‌ வீடுதோறும்‌ சென்று மக்கும்‌ குப்பைகள்‌, மக்கா குப்பைகளை தனித்தனியாக தரம்‌ பிரித்து சேகரிக்கப்பட்டு வருவதையும், அதே பகுதியில்‌ வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களைக்‌ கண்டறிந்து பரிசோதணை செய்து சேகரிக்கப்பட்டு வரும்‌ விபரங்கள் குறித்து களப்பணியாளர்களிடம்‌ கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, வார்டு எண்‌.35க்குட்பட்ட எம்‌.ஜி.ஆர்‌. நகா்‌ மற்றும்‌ ஜெயப்பிரகாஷ்‌ நகரில் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில்‌ பழுதடைந்துள்ளதால் அச்சாலைகளை புதுப்பிப்பதற்கான பணிகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ பிரியா நகர்‌ மற்றும்‌ பேரூர்‌ மெயின்‌ ரோடு எல்‌.ஐ.சி காலனி, ஆர்‌.எஸ்‌.நகர்‌ பகுதியில்‌ வாரத்திற்கு 7 நாட்கள்‌ 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும்‌ திட்டத்தில்‌ முடிக்கப்பட்ட குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ நீர் மானிகள்‌ பொருத்தப்பட்ட பணிகளை பார்வையிட்டார்.



பின்னர்‌, செல்வபுரம்‌ வரிவசூல் மையத்தில்‌ 24மணிநேர குடிநீர்‌ திட்ட பணிக்கான வாடிக்கையாளர்‌ சேவை மையம்‌ அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய ஆணையாளர்‌ அவர்கள்‌, வரிவசூல்‌ மையத்தின்‌ அருகில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமில்‌ (Swap Test) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள விபரங்களை சுகாதாரப்பணியாளர்களிடம்‌ கேட்டறிந்தார்.

மேலும், ஏ.ஏ.ஸ்கீம்‌ ரோடு, நாதன்‌ நகரில்‌ வீடுகளில்‌ குடிநீருக்காக பொருத்தப்பட்ட மீட்ட இணைப்புகளை பார்வையிட்டும்‌, பின்ன‌ர், கோவை மாநகராட்சி காந்தி பூங்கா குடிநீர் விநியோக பிரிவு அலுவலகத்தில்‌ 24 மணிநேரமும்‌ குடிநீர்‌ வழங்கும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்‌ (24X7 குடிநீர் திட்டம்‌) பார்வதி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர்‌, உதவி பொறியாளா்கள்‌ சத்தியமூர்த்தி, குமார்‌, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...