கோவை: வால்பாறை குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன.

இவற்றுக்கு குடிநீர் ஆதாரமாக அக்காமலை புல்வெளியிலிருந்து வரும் நீர் கருமலை அருகே தடுப்பணை கட்டி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் இயற்கை உந்துசக்தி வழியாக வால்பாறையில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றது.
இதனிடையே, இந்த தடுப்பணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் இந்த தடுப்பணையை தூர்வாரும் பணியை இன்று துவக்கியது. வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் பூமி பூஜை செய்து இன்று பணியை துவக்கி வைத்தார்.
தடுப்பணை பகுதிகளுக்குள் உள்ள சேர்களை தூர்வாருதல், தடுப்பணையில் உயரத்தை கூட்டுதல், தடுப்பணை முன்பகுதியில் நீர் வடிகால் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும், வால்பாறை நகருக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் வரும் ஆற்றில் இருந்து குழாய் மூலம் நேரடியாக நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் இப்பணிகள் 2 மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.