2020 -21ம் ஆண்டிற்கு உழைக்கும் பெண்களுக்கான மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை: 2020 -21ம் ஆண்டிற்கு உழைக்கும் பெண்களுக்கான மானிய ஸ்கூட்டருக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: 2020 -21ம் ஆண்டிற்கு உழைக்கும் பெண்களுக்கான மானிய ஸ்கூட்டருக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2020-21ம் ஆண்டிற்கு உழைக்கும் பெண்களுக்கான அம்மா மானிய ஸ்கூட்டர் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி பயனாளிகள் எனில் ரூபாய் 31 ஆயிரத்து 250 வரை மானியம் வழங்கப்படும். கியர் இல்லாத 125 சி.சி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.



அதேபோல, உழைக்கும் பெண்கள், அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிவோர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் பிரதிநிதிகள், சுய தொழில் செய்யும் பெண்கள், இத்திட்டத்தில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், திட்டத்தில் பயன் பெறுபவர்கள் 18 முதல் 45 வயது வரையுள்ள, ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள், மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித்தகுதி முற்றிலும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் மட்டும் இருக்க வேண்டும். 35 வயதை கடந்து திருமணம் ஆகாத பெண்கள், விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள், ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேபோல, விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல், இவற்றில் ஏதேனும் ஒன்று, ஓட்டுநர் உரிமம் நகல், வேலையின் தன்மை மற்றும் வருமான சான்றிதழ், வேலை அளிப்பவர்கள் இடம் இருந்து பெறப்பட வேண்டும்.

மேலும், தொழில் புரிவோர் அதற்கான வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆக இருந்தால் அதற்கான ஜாதி சான்றிதழில், ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...