கோவையில் திருச்சி சாலை மேம்பாலப் பணிகளை முடிக்காமல் அவிநாசி சாலை மேம்பாலம் பணிகளை தொடங்க கூடாது - நா.கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள்!

கோவை: கோவை திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருச்சி சாலை மேம்பால கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒருபுறம் வாகனப் போக்குவரத்து, மற்றொருபுறம் பாலம் கட்டுமானப் பணி என இரண்டுமே ஒரே நேரத்தில் நடப்பதால் திருச்சி சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்தவித பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அவினாசி சாலையில் மேம்பாலப் பணிகளை தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே, திருச்சி சாலை மேம்பாலப் பணிகளை முடிக்காமல் அவினாசி மேம்பாலப் பணிகளை தொடங்க கூடாது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...