திருப்பூரில் கணவருக்கு சொந்தமான இடத்தை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு!

திருப்பூர்: திருப்பூரில் கணவருக்கு சொந்தமான இடத்தை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர வேண்டி பாதிக்கப்பட்ட பெண் தனது பிள்ளைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: திருப்பூரில் கணவருக்கு சொந்தமான இடத்தை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர வேண்டி பாதிக்கப்பட்ட பெண் தனது பிள்ளைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவிதா. இவரது கணவர் ரவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மாமனார் சாமியப்பன், மாமியார் பாலாமணி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மாமனார் சாமியப்பனுக்கு சொந்தமான நிலத்தை மாமியாரின் உறவினர் சௌந்தராஜன் என்பவர் நம்பிக்கை மோசடி செய்து, அவரது பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டதாகவும் அதே போல், தற்போது தனது மாமியாரை தனக்கு எதிரியாக மாற்றி மாமனாருக்கு சொந்தமான 5.92 ஏக்கர் நிலத்தை அவரது பெயருக்கு உயில் எழுதி எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சொளந்தர்ராஜன் பாலின இச்சைக்கு நான் உடன்பட மறுத்ததால் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் செளந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது என் மாமனாரை சௌந்தர்ராஜன், விஸ்வநாதன் மற்றும் ரங்கசாமி ஆகியோர் எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு நான் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றால் தான் அவர்களை விடுவிப்பதாக கூறியும், இல்லை என்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாக கூறினார்.

ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து இழந்த சொத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட சவிதா, தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...