கோவை நத்தம் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு!

கோவை: கோவை நத்தம் அருகே ரூபாய் 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது.


கோவை: கோவை நத்தம் அருகே ரூபாய் 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது.

கோவை அருகே நத்தம் பகுதியில் 2.86 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சில குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்தனர்.

இந்நிலையில், அதனை மீட்க அரசுத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, 1957ம் ஆண்டு வழங்கப்பட்டதால் தங்களுக்கு அந்த நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கக் கோரி அந்த குடும்பத்தினர் கோவை மூன்றாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். பிரவீணா நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் நிலத்தை உடனடியாக மீட்டு அரசு வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். மேலும் நிலத்திற்கு உரிமை கொண்டாடிய குடும்பத்தினரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் தாமோதரன் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூபாய் 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...