பொள்ளாச்சி அருகே, தம்பியை மதுகுடிக்க அழைத்து சென்ற நண்பரை, கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன்..! போலீஸார் தேடல்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள வளசுபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல் (34). இவரது தம்பி ராம்குமார் (27). இவர் வேலைக்கு செல்லாமல் பக்கத்து தோட்டத்துகாரர் கருப்புசாமி (50) என்பவருடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள வளசுபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல் (34). இவரது தம்பி ராம்குமார் (27). இவர் வேலைக்கு செல்லாமல் பக்கத்து தோட்டத்துகாரர் கருப்புசாமி (50) என்பவருடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இதை சக்திவேல் கண்டித்தததால், அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அருகில் உள்ள தோட்டத்தில் ராம்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோர் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு சென்ற சக்திவேல் தம்பி ராம்குமாரை கண்டித்து அடித்துள்ளார். அப்போது, அவருடன் இருந்த கருப்புசாமியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சக்திவேல் கட்டையால் கருப்புசாமியின் தலையில் தாக்கினார். இதில், பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள், மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, சக்திவேல் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள நெகமம் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...