கோவை: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 27), ஏ.சி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கௌரி என்ற திருமணமான பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பஜனை கோவில் வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்த அவருக்கு, கொரோனா தொற்று காரணமாக போதுமான வேலை இல்லாததால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். தற்போது, குளிர்காலம் என்பதால் ஏ சி பொருத்தும் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால், கடந்த சில நாட்களாக ஆதிமூலம் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று, இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் அந்த பெண்ணிடம் சிகரெட் வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கௌரி தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட ஆதிமூலத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், 174 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.