கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை, ராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 57), இவரது மனைவி வசந்தி (46), இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று, குடிபோதையில் வீட்டுக்கு வந்த லோகநாதன், வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த லோகநாதன் தன் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
பின்னர், அங்கிருந்த அரிவாளை எடுத்து வசந்தியை வெட்டினார். பலத்த காயமடைந்த வசந்தியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தை விசாரித்த போலீஸார், 307 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.