கோவை: கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுகிறதா..? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவைக்காக தினமும் 265.70 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், பவானி மற்றும் ஆழியாறு திட்டங்களில் இருந்து தற்போது 181.00 எம்.எல்.டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. 24 வார்டுகளில், 2 நாட்களுக்கு ஒருமுறை என்கிற இடைவெளியில் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், பிற வார்டுகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்துடன், மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 2042 ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து வார்டுகள் தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.