கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகளை, மீன் பண்ணைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பாக குப்பைகள் மேலான்மை தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 4500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள, குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளாக தரம்பிரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்படுகின்றன.
வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செலப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 69 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் என சொல்லக்கூடிய நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 24 நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதில் 4 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனிடையே, மாநகரில் உள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளில் கோழிக்கழிவுகளை, மீன்களுக்கு உணவாக்க மாநகராட்சி சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் இறைச்சிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இறைச்சிக் கடைகள் செயல்படும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 100 கிலோ வரை இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், இருந்து சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகளை,தொழில்நுட்ப இயந்திரங்களின் உதவியுடன் மீன்களுக்கு உணவாக மாற்றி மீன்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாநகரில் இறைச்சி கழிவுகள் சேர்வது குறைக்கப்படும்,’’ என்றார்.