சுற்றுச்சூழலை காக்க ஒரு தனி அணி..! திமுக தலைவர் ஸ்டாலின் தனது பண்பையும், தொலைநோக்குப் பார்வையையும் நிரூபித்துள்ளார் - கார்த்திகேய சிவசேனாதிபதி

கோவை: சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பேணி காக்க ஒரு தனி அணியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அணிக்கு முதல் செயலாளராக, காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பேணி காக்க ஒரு தனி அணியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அணிக்கு முதல் செயலாளராக, காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில், திமுக-வில் இணைந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்ற பெருமையை பெற்றவர். 

இது குறித்து தனது கருத்துகளை பதிவு செய்துள்ள கார்த்திகேய சிவசெனபதி:

பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்கள் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அதனோடு இணைந்த வாழ்வியல் முறையைக் கொண்டவர்கள். தமிழர்களுடைய சுற்றுச்சூழல் அறிவு தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் வெளிப்படுகிறது. "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை", அதற்கு சான்றாக, இந்த குறள் விளங்குகிறது.

இந்த சான்றுகள் மூலம் நாம், ஏன் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க வேண்டும், நீராதாரங்களையும், மழை நீர் சேகரிப்பையும் உருவாக்க வேண்டும் என விளக்குகிறது. பெரும் முதலாளிகளுக்காக சுற்றுச்சூழல் சட்டங்களை மாற்றி சுற்றுச்சூழலுக்கும் அதனால் சாமானிய மக்களுக்கும் நேரக்கூடிய அழிவு மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்த வகையிலே திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத்தின் தலைவர் தளபதி அவர்களும் சுற்றுச்சூழலுக்கு ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு முதல் செயலாளராக என்னை நியமித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

தமிழகத்தைப் பசுமையான சுற்றுச்சூழல் நிறைந்த மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடியாக மாற்றி அமைக்க பாடுபடுவேன்.சுற்றுச்சூழல், நீராதாரங்கள் மேம்பாடு, மரம் வளர்ப்பு, என இயற்கையின் மீது அளப்பறியா ஆர்வம் கொண்ட அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்.

நூறு வருடங்களுக்கு முன்பு திராவிட இயக்கம் எப்படி சமூக நீதி, கல்வி, பொருளாதார மேம்பாடு, போன்றவற்றை எல்லாம் தமிழக மக்களுக்குத் தேவை என்று உணர்ந்து பணியாற்றியதோ, அதே போல் இன்றைய காலத்திற்கு ஏற்ப தேவையான முன்னெடுப்புகளை எடுப்பதற்கு இந்திய நாட்டிலேயே உள்ள ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறுபடியும் தலைவர் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள், என்று புகழாரம் சூட்டியுள்ளார். 



இந்திய நாட்டிலேயே சுற்றுச்சூழலுக்குத் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகமே. இனிமேல், அனைத்து கட்சிகளும் இதனைக் கண்டு சுற்றுச்சூழலுக்கு ஒரு அமைப்பை உருவாக்க முன்வருவார்கள் என்பது நாம் அறிந்தது தான் என்றாலும், அதை முதன்முறையாக முன்னோடியாக எடுத்துச் செய்தது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய பண்பையும், தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக எனக்கு வாய்ப்பளித்த தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...