தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களை தவிர எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களை தவிர எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:-

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் எங்கெல்லாம் பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படுகிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார். 

மேலும், நிவர் புயல் எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் புயலால் பாதிப்புகள் குறித்து நாளை தான் தெரிய வரும் என்றும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...