கோவை மாநகராட்சி வடக்கு மற்றும்‌ கிழக்கு மண்டலங்களில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மற்றும்‌ கிழக்கு மண்டலங்களில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மற்றும்‌ கிழக்கு மண்டலங்களில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட அனைத்து குடியிருப்பு கட்டிடங்கள்‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலகக்‌ கட்டிடங்கள்‌ மற்றும்‌ சாலைகளில்‌ உள்ள தாழ்வான பகுதிகளில்‌ மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.43க்குட்பட்ட பகுதியில்‌ மழைநீர் சேகரிப்பு பற்றி ஆதித்யா அக்குவாடெக்‌ சொல்யூசன்‌ நிறுவனம்‌ அவர்களின்‌ அலுவலகக்‌ கட்டிடத்தில்‌ நிறுவப்பட்டுள்ள மழைநா்‌ வடிகால்‌ சேகரிப்பு கட்டமைப்பு, சூரிய ஒளி மின்‌ அமைப்பு மற்றும்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்‌ ஆகியவை நடைபெறும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., கேட்டறிந்தார்.



தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ உடையாம்பாளையம்‌ பகுதியிலுள்ள மே பிளவர்‌ மெட்ரோ பாலிஸ்‌ அபார்ட்மென்ட்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ உள்ள அனைத்து வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பைகள்‌, மக்கா குப்பைகள்‌ என தனித்தனியாக தரம்‌ பிரித்து வழங்கப்பட்டு வரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர்‌, வார்டு எண்‌.66க்குட்பட்ட உடையாம்பாளையம்‌ ரோடு, மீனா எஸ்டேட் பகுதியில்‌ பிரதான குடிநீர் குழாய்‌ இணைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌ அவர்கள்‌, தொடர்ந்து, வாலாங்குளத்தில்‌ ஆகாயத்தாமைரை அகற்றும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆணையாளர்‌ அவர்கள்‌ வெளியேற்றப்படும்‌ ஆகாயத்தாமரைகளை வாகனங்கள்‌ மூலம்‌ அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்திடுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார். 



இந்த ஆய்வின் போது, மாநகரப் பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ செந்தில்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), எம்‌.முருகன்‌ (கிழக்கு), செயற்பொறியாளா்கள்‌ (ஸ்மார்ட்சிட்டி திட்டம்‌) சரவணக்குமார்‌, பார்வதி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...