கோவை நீலாம்பூர் அருகே லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது - தலைமறைவான விடுதி உரிமையாளருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவை நீலாம்பூர் அருகே உள்ள லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் தலைமறைவான லாட்ஜ் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை நீலாம்பூர் அருகே உள்ள லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் தலைமறைவான தங்கும் விடுதி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

கோவை, சூலூர், நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் தீம் பார்க் அருகே ஏதேன் தோட்டத்தில் டேவிட் மகாராஜா என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஜோடியாக வருபவர்களுக்கு ஒரு மணி நேரம் தங்குவதற்கு ரூ.500 என்ற அளவில் வாடகைக்கு விட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கு விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கருமத்தம்பட்டி டி.எஸ்.பி சூரியமூர்த்தி உத்தரவின் பேரில், சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த அறையில் தேனி உத்தம பாளையத்தைச் சேர்ந்த பகவதி ராஜ் (25), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த அய்யனார் (27), ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த இரண்டு அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும், விசாரணையில் தங்கும் விடுதி உரிமையாளர் டேவிட் மகாராஜா ஏற்பாட்டில் விபச்சாரம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான தங்கும் விடுதி உரிமையாளர் டேவிட் ராஜாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...