கோவை: கோவையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணிடம் மூன்று பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துளசியம்மாள். இவர் தனது வீட்டருகே நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் துளசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து போத்தனூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், பேரூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பாபு (26), என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சுந்தராபுரம் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நாகார்ஜுன் (29), என்பவருடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு போத்தனூரில் சுலோக்சனா என்பவரிடம் 3 பவுன் நகை, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவரிடம் 2 பவுன் நகை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேர் மீது போலீசார் 392 ,397 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.