உதயநிதி ஸ்டாலினை கண்டு அதிமுக பயப்படாது. நடிக்க வாய்ப்பு இல்லாததால் குடும்ப கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்புதூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 



இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, திமுக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியை மிரட்டும் தோணியில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். 



மேலும் அவர் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக அதிக கூட்டங்களை அரசியல் கட்சிகள் கூட்டக் கூடாது என்பது நாடு முழுவதும் உள்ள நடைமுறை. "உதயநிதி ஸ்டாலினை கண்டு அதிமுக பயப்படாது. அவரது தாத்தா கலைஞரையும் அதிமுக சந்தித்து உள்ளது. தற்போது ஸ்டாலினையும் சந்தித்து வருகிறது. இவர் ஒரு சாதாரணமான அரசியல் பேச்சாளர், நடிக்க வாய்ப்பு இல்லாததால் குடும்ப கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்", என்று தெரிவித்தார். 

"ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே, காவல்துறையினரை மிரட்டுகிறார்கள், இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க எவ்வளவு அராஜகத்தில் ஈடுபட போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சிக்கு வருவோம், என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், நான்கு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு அதிமுக இதைவிட வலுவாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...