கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்களில், புதிதாக 51,303 பேர் விண்ணப்பித்துள்ளனர், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனு அளிக்கலாம், என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பெயர் சேர்க்க, திருத்த, நீக்க மனு அளித்தனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 21 ஆம் தேதி 22,991 பேரும், 22ஆம் தேதி 43,795 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர் எனவும், 21-ஆம் தேதியை விட 22ஆம் தேதி அன்று முகாம்களில் அதிகம் பேர் மனு அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த முகாம்களில் பெயர் சேர்க்க/ நீக்க என மொத்தம் 66 ஆயிரத்து 786 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 51 ஆயிரத்து 303 பேர் படிவம் 6 சமர்ப்பித்துள்ளனர். மேலும், பெயர் நீக்க படிவம் 7 ஐ, 3,075 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8ஐ, 4465 பேரும், ஒரே தொகுதியில் திருத்தம் செய்ய படிவம் 8ஏ ஐ, 3024 பேரும் பூர்த்தி செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம், செய்ய அளிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வருமாறு:-
மேட்டுப்பாளையம் 6,513, சூலூர் 9,358, கவுண்டம்பாளையம் 9,019, கோவை வடக்கு 5660, தொண்டாமுத்தூர் 8,732, கோவை தெற்கு 3614, சிங்காநல்லூர் 5537 கிணத்துக்கடவு 7398, பொள்ளாச்சி 5,550, வால்பாறை 5,406. சூலூர் 9,358 பேர் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சூலூர் தொகுதிகளில் தான் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 358 பேர் விண்ணப்பித்து இருப்பது, குறிப்பிடத்தக்கது.