கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அகற்றம்

கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே கோவில் மேடு, ஜல்லிகாட்டு சாலை சந்திப்பு அருகே 3 அடி பஞ்சமுக விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த சிலை சாலை ஓரத்தில் வைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.



கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே கோவில் மேடு, ஜல்லிகாட்டு சாலை சந்திப்பு அருகே 3 அடி பஞ்சமுக விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த சிலை சாலை ஓரத்தில் வைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இது குறித்து சிலர், சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் நேற்று மாலை அங்கு சென்று விசாரணை செய்தனர். அதில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு சிலையை அனுமதி இன்றி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த சிலையை அகற்ற முயன்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் அங்கு குவிந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்,பஅங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிலையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, பூஜை செய்து அந்த விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...