கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில், தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை..!

கோவை: கோவையில் 16 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், உடந்தையாக இருந்த தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமானநேட்ர நீதிமன்றம் நேற்று மாலை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை: கோவையில் 16 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், உடந்தையாக இருந்த தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமானநேட்ர நீதிமன்றம் நேற்று மாலை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது மதிக்கத்தக்க பெண் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு, 16 வயது மதிக்கத்தக்க பெண் உள்ளார். அச்சிறுமி அவரது தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த பெண்மணிக்கு கோவை, வெங்கிடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு சுப்பிரமணியம் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன், 20 2017 அன்று சிறுமியின் தாயார் தூங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுப்பிரமணியன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இது சம்மந்தமாக, சிறுமி அவரது தாயாரிடம் சொன்னபோது சிறுமியை அவரது தாயார் சமாதானப்படுத்திவிட்டார். அதன் பின்னர், ஆறு மாதம் கழித்து அச்சிறுமி அவரது தந்தையின் வீட்டுக்கு சென்றிருந்த போது மேற்படி சம்பவம் தொடர்பாக அவரது தந்தையிடம் கூறியுள்ளாள். இதையடுத்து, சிறுமியின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று செப்டம்பர் 18, 2018 அன்று பாலியல் வன்கொடுமை குறித்து புகார் கொடுத்துள்ளனர். 

இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வி, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தார். 

மேற்படி, வழக்கு கோவை சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று நீதிபதி, ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனையும் சுப்பிரமணியத்துக்கு ரூபாய் 5000/- மற்றும் சிறுமியின் தாயாருக்கு ரூபாய் 6000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

இந்தத் தீர்ப்பு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...